Friday, March 13, 2009

போன பின்

இனியெப்போதும் வரப்போவதில்லையேன்று
விளங்கவுமில்லை
அவள் சொல்லவுமில்லை.
இந்நேரம் நெடுந்தூரம் போயிருப்பாள்
அதே மாதிரி வேறு வேறு புன்னகைகளோடு.
தேடிக் கொண்டிருக்கிறேன்
அதே உலகின் வேறு வேறு திசைகளில்..

1 comment:

முகமூடியணிந்த பேனா!! said...

வேறு வேறு அதே மாதிரி புன்னகைகளோடு
பொய் கொண்டேதான் இருப்பாள்!
நீ தேடி கொண்டே இருக்க தயாராய் இருக்கும்போது....

உனக்கு
விளங்காமல் போவதற்குள்...
அவளுக்கு
விளங்க வைத்து விடு
உன் தேடலையும்
தேடல் நிமித்தத்தையும்!